முத்தையாபுரத்தில் விநாயகர் சிலை விசர்ஜன விழா
முத்தையாபுரத்தில் விநாயகர் சிலை விசர்ஜன விழா நடைபெற்றது.
ஸ்பிக்நகர்:
முத்தையாபுரம் இந்து முன்னனி சார்பாக விநாயகர் சிலை விசர்ஜன விழா நடைபெற்றது. இந்த விழாவில் அய்யன்கோவில் தெரு, பொன்னான்டி நகர், வரதவிநாயகர் கோவில் தெரு, அம்மன் கோவில் தெரு, ஆனந்தநகர், கிருஷ்ணா நகர், சுந்தர்நகர், ஜெ.எஸ். நகர், சுபாஷ் நகர், நேருஜீ நகர், வடக்குதெரு, சாந்திநகர், குமாரசாமிநகர், அத்திமரப்பட்டி, தோப்புதெரு, மற்றும் பாரதிநகர் பகுதிகளை சேர்ந்த 19 விநாயகர் சிலைகள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் முத்தையாபுரம் பஜாருக்கு மேள தாளங்களுடன் கொண்டு வரப்பட்டன. அதனை தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.
விழாவில் தெற்கு மண்டல விநாயகர் சதுர்த்தி கமிட்டி ஒருங்கிணைப்பாளர் அருள்ராஜ், செயலாளர் பாலா, இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர்கள் மாரியப்பன், சிவகுமார், மாநில செயலாளர் குற்றாலநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் தங்கமாள்புரம், சூசைநகர், சுனாமிகாலனி வழியாக துறைமுக விருந்தினர் மாளிகை அருகே கடலில் கரைக்கப்பட்டன்.பாதுகாப்பு ஏற்பாடுகளை ஊரக உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்திஷ் தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் மேற்பார்வையில் போலீசார் செய்திருந்தனர்.