முத்தையாபுரத்தில்கார் மோதி முதியவர் சாவு


முத்தையாபுரத்தில்கார் மோதி முதியவர் சாவு
x
தினத்தந்தி 3 Aug 2023 12:15 AM IST (Updated: 3 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முத்தையாபுரத்தில் கார் மோதி முதியவர் இறந்து போனார்.

தூத்துக்குடி

ஸ்பிக்நகர்:

.தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் முனியசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 65). இவர் முத்தையாபுரம் தோப்பு தெருவில் உள்ள டீக்கடையில் டீ குடித்துவிட்டு தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையை கடந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கார், அவர் மீது மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார். தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அல்லி அரசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story