முத்தையாபுரத்தில்பெண் தூக்கு போட்டு தற்கொலை
முத்தையாபுரத்தில் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி
ஸ்பிக்நகர்:
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது மனைவி தவமணி (வயது38). இவர் கடந்த 3 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் திருமாஞ்சி நகரில் உள்ள தாய் வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வீட்டில் திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் அறிந்த முத்தையாபுரம் போலீசார் சம்பவ வீட்டுக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story