நாகையில், பூக்கள் விலை உயர்வு


நாகையில், பூக்கள் விலை உயர்வு
x

கடும்பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைந்ததால் நாகையில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

நாகப்பட்டினம்

கடும்பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைந்ததால் நாகையில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

நேதாஜி பூ மார்க்கெட்

நாகை பழைய பஸ் நிலையம் அருகே நேதாஜி பூ மார்க்கெட் உள்ளது. இங்கே 20-க்கும் மேற்பட்ட பூக்கடைகள் உள்ளன. இங்கு வேதாரண்யம், ஓசூர், கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினந்தோறும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்த மார்க்கெட்டில் முல்லை, கேந்தி, செவ்வந்தி, சம்மங்கி, முல்லை, அரும்பு, மல்லி, ரோஸ் உள்ளிட்ட பலவகையான பூக்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மார்க்கெட்டில் நாள்தோறும் 5 முதல் 6 டன் வரை பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

பனிப்பொழிவால் விலை உயர்வு

சாதாரண நாட்களை விட பண்டிகை காலங்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்படும். அதேபோல மழை, பனிக்காலங்களில் பூக்களின் விலை உச்சத்தில் இருக்கும்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழையால் கனமழை பெய்து வந்தது. தற்போது பெரும்பாலான பகுதிகளில் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் பூக்கள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாகை மார்க்கெட்டிற்கு பூக்களின் வரத்து குறைந்ததால், விலை கடுமையாக அதிகரித்துள்ளது. நாகை மார்க்கெட்டில் 1 கிலோ ரூ.200-க்கு விற்ற முல்லைப்பூ தற்போது 600-க்கும், சம்மங்கி ரூ.80-க்கும், கேந்தி ரூ.70 முதல் 80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. செவ்வந்தி ரூ.120-க்கும், ரோஜா ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.


Next Story