நாகையில், மாற்றுத்திறனாளிக்கு உதவிய பெண் சப்-இன்ஸ்பெக்டர்
நாகையில், மாற்றுத்திறனாளிக்கு பெண் சப்-இன்ஸ்பெக்டர் உதவி செய்தார்.
நாகப்பட்டினம்
நாகை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பலர் கலந்து கொண்டு கோரிக்கை மனு அளித்தனர்.. இதில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கலெக்டரை சந்தித்து விட்டு, படிக்கட்டில் தவழ்ந்து வந்து கொண்டிருந்தார். நுழைவு வாயில் படிக்கட்டில் இறங்கும் போது அவர் தவறி கீழே விழ முற்பட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரியா (பயிற்சி), அந்த மாற்றுத்திறனாளி பெண்ணை கீழே விழாமல் தங்கி பிடித்தார். இதையடுத்து அந்த பெண்ணை, சக பெண் போலீசார் உதவியுடன் தூக்கி ஆட்டோவில் ஏற்றி விட்டார். பெண் போலீசாரின், இந்த கனிவான செயலை பார்த்தவர்கள் அவரை பாராட்டினர்.
Related Tags :
Next Story