நாகையில், விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


நாகையில், விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

அரசு சார்புடைய நிறுவனங்கள் மூலம் பயிர்க்காப்பீடு செய்ய வலியுறுத்தி நாகையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

பயிர்க்காப்பீடு

கடந்த 2020-21-ம் ஆண்டு நெற்பயிர் அறுவடையின்போது கனமழை பெய்து அனைத்து விவசாயிகளுக்கும் பேரிழப்பு ஏற்பட்டது. எனவே நாகை தாலுகாவில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களுக்கும் 75 சதவீத பயிர்ப்காப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.

கடந்த ஆண்டுக்கான காப்பீ்ட்டு தொகையை தீபாவளிக்குள் வழங்க வேண்டும். தனியார் நிறுவனங்களை வெளியேற்றி விட்டு, அரசு சார்புடைய நிறுவனங்கள் மூலம் மட்டுமே பயிர்க்காப்பீடு செய்ய வேண்டும்.

ஆர்ப்பாட்டம்

விளைநிலங்களை சேதப்படுத்தும் பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகை வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நாகை தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர்கள் ஜீவாராமன், சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர். விவசாய சங்க நாகை மாவட்ட துணைத்தலைவர் முருகையன், நாகை வடக்கு ஒன்றிய பொருளாளர் சந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.


Next Story