நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
கன்னியாகுமரி
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நாகர்கோவில் மாநகரக்குழு சார்பில் நாகர்கோவிலில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அரிசி, கோதுமை, பருப்பு, மாவு வகைகள், தயிர் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்கள் மீதும் ஜி.எஸ்.டி. வரி விதித்து விலைகளை உயர்த்துவதை கண்டித்தும், ஏழை- நடுத்தர மக்கள் மீது சுமைகளை ஏற்றக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநகர செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்லசுவாமி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். நிர்வாகிகள் கண்ணன், அந்தோணி, மிக்கேல், மணிகண்டன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முடிவில் அகமது உசேன் நிறைவுரையாற்றினார்.
Related Tags :
Next Story