நாலுமாவடியில்ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள்
நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகளை மோகன் சி.லாசரஸ் வழங்கினார்.
தென்திருப்பேரை:
குரும்பூர் அருகே உள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய தேவனுடைய வீட்டில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடை வழங்கும் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடந்தது. விழாவிற்கு இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் தலைமை வகித்து கிறிஸ்துமஸ் சிறப்பு செய்தி வழங்கி, ஏழைகள் 2 ஆயிரத்து 500 பேருக்கு புத்தாடைகளும், 150 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிளும், 7 பேருக்கு தையல் எந்திரமும் வழங்கினார். இதேபோன்று மோகன் சி லாசரஸ் மனைவி ஜாய்ஸ் லாசரஸ், ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், திருநங்கைகள், நரிக்குறவர்கள், தர்மம் எடுப்பவர்கள் உட்பட 2 ஆயிரத்து 500 பேருக்கு புத்தாடைகளை வழங்கினார். முன்னதாக இயேசு விடுவிக்கிறார் ஊழியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் புதுவாழ்வு பன்னோக்கு மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் அன்புராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் புதுவாழ்வு சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.