நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு-550 காசுகளாக நிர்ணயம்


நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு-550 காசுகளாக நிர்ணயம்
x

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் 550 காசுகளாக முட்டை விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

நாமக்கல்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 545 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 550 காசுகளாக உயர்ந்து உள்ளது.

கறிக்கோழி கிலோ ரூ.143-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.95-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.


Next Story