நம்பியூரில்காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நம்பியூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்
ஈரோடு
ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நம்பியூர் தபால் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நம்பியூர் தெற்கு வட்டார தலைவர் ஜவகர் தலைமை தாங்கினார். நம்பியூர் வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் சண்முகசுந்தரம், மாநில பொதுக்குழு உறுப்பினர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி பதவி பறிப்பு, பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சதீஷ்குமார், விக்னேஷ், தி.மு.க. ஒன்றிய செயலாளர் மெடிக்கல் செந்தில்குமார், வக்கீல் சென்னியப்பன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story