நாசரேத் பிரகாசபுரத்தில் மாதா சிலையை சேதப்படுத்திய வாலிபர் கைது


நாசரேத் பிரகாசபுரத்தில் மாதா சிலையை சேதப்படுத்திய   வாலிபர் கைது
x
தினத்தந்தி 8 Nov 2022 12:15 AM IST (Updated: 8 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாசரேத் பிரகாசபுரத்தில் மாதா சிலையை சேதப்படுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

நாசரேத்:

நாசரேத் பிரகாசபுரம் பரிசுத்த பரலோக மாதா ஆலயத்தின் கெபியில் மாதா சிலையை சேதப்படுத்திய வாலிபரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

மாதா சிலை சேதம்

நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரத்தில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் பிரகாசபுரம் பரிசுத்த பரலோக மாதா ஆலயத்தின் முன்புறம் உள்ள கெபியில் உள்ள மாதா சிலை உடைக்கப்பட்டு அதன் முகப்பு கண்ணாடியும் உடைக்கப்பட்டு இருந்தது. இந்த சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளியை உடனடியாக கைது செய்ய கோரியும் கிறிஸ்தவர்கள் பிரகாசபுரம் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போலீசார் சமாதானம் செய்ததை தொடர்ந்து ஒரு மணி நேர மறியல் போராட்டத்தை கைவிட்டு கிறிஸ்தவர்கள் கலைந்து சென்றனர்.

வாலிபர் கைது

சாத்தான்குளம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அருள் மேற்பார்வையில் நாசரேத் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ேபாலீசார் ஆய்வு நடத்தினர். இதில் பிரகாசபுரம் 6-ஆவது தெருவை சேர்ந்த சுடலை ஐயாசாமி மகன் இசக்கிமுத்து (வயது 36) என்பவர் மாதா சிலையை சேதப்படுத்தியது தெரிய வந்தது. இதை தொடர்ந்து நேற்று காலையில் நாசரேத் போலீசார் இசக்கி முத்துவை கைது செய்தனர்.


Next Story