நாசரேத்தில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட மாநாடு
நாசரேத்தில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட மாநாடு நடைபெற்றது.
நாசரேத்:
ஏ.ஐ.டி.யு.சி. 9-வது மாவட்ட மாநாடு நாசரேத் காமராஜர் பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இம்மாநாட்டிற்கு மாவட்ட பொது செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கரும்பன், உதவி செயலாளர்கள் பாலமுருகன், பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முத்துக்குமார் வரவேற்று பேசினார். பாண்டி மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார். மாநில பொது செயலாளர் டி.எம்.மூர்த்தி, மாநில செயலாளர் காசி விசுவநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர். பின்னர் புதிய மாவட்ட தலைவராக கிருஷ்ணராஜ், பொது செயலாளராக லோகநாதன், பொருளாளராக பாலசிங்கம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநாட்டில், டாஸ்மாக் பணியாளர்கள், உள்ளாட்சி பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள், மின் பணியாளர்கள் ஆகியோருக்கு குறைந்தபட்ச சம்பளம் ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும். மின்சார துறை உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
உள்ளாட்சி மற்றும் அரசு சார்ந்த துறைகளில் நீண்டகாலமாக பணிபுரியும் பணியாளர்களை நிரந்தரம் ெசய்ய வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். நகர செயலாளர் மாணிக்கம் நன்றி கூறினார்.