நாசரேத்திலுள்ள மனநலம் பாதிக்கப்பட்டோர் இல்லத்தில் கலெக்டர் ஆய்வு
நாசரேத்திலுள்ள மனநலம் பாதிக்கப்பட்டோர் இல்லத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி
நாசரேத்:
நாசரேத்தில் வகுத்தான்குப்பம் ரோட்டிலுள்ள நல்ல சமாரியன் மனநலம் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு இல்லத்தில் 50 பேர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த மனநலம் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு இல்லத்தை தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார். இந்த இல்லம் முறையாக பராமரிக்கப்படுகிறதா?, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை என்ன? போன்றவை குறித்து கலெக்டர் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், ஏரல் தாசில்தார் கண்ணன், நாசரேத் நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி பால்ராஜ், நாசரேத் சப்-இன்ஸ்பெக்டர் ராய்ஸ்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story