நாசரேத்தில்தலைமை ஆசிரியர் தாக்கியதில் பிளஸ்-1 மாணவர் காயம்


நாசரேத்தில்தலைமை ஆசிரியர் தாக்கியதில் பிளஸ்-1 மாணவர் காயம்
x
தினத்தந்தி 14 Oct 2023 12:15 AM IST (Updated: 14 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாசரேத்தில் தலைமை ஆசிரியர் தாக்கியதில் பிளஸ்-1 மாணவர் காயம் அடைந்துள்ளார்.

தூத்துக்குடி

நாசரேத்:

நாசரேத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 மாணவர் ஒருவர் பேண்டை முழங்காலுக்கு மேல் வரையிலும் மடித்து வைத்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த மாணவரை பார்த்த தலைமை ஆசிரியர் கண்டித்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் தலைமை ஆசிரியர், மாணவரை பிரம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த மாணவர், ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நாசரேத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story