நெய்வேலியில் தடுப்பு கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதல்; என்ஜினீயர் பலி


நெய்வேலியில்  தடுப்பு கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதல்; என்ஜினீயர் பலி
x
தினத்தந்தி 11 Nov 2022 12:15 AM IST (Updated: 11 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நெய்வேலியில் தடுப்பு கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் என்ஜினீயர் உயிாிழந்தாா்.

கடலூர்

நெய்வேலி,

நெய்வேலி அருகே உள்ள இந்திரா நகர் தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் கண்ணன் மகன் அரவிந்த்(வயது 30). என்ஜினீயர். இவர் என்.எல்.சி. 2-ம் அனல்மின் நிலையத்தில் மனிதவளத்துறை பிரிவில் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அரவிந்த் தனது மோட்டார் சைக்கிளில் மெயின் பஜாரில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். பாரதி விளையாட்டு மைதானத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, சாலை நடுவில் உள்ள தடுப்பு கட்டையில் அரவிந்த் சென்ற மோட்டாா் சைக்கிள் மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவர் பலத்த காயமடைந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக என்.எல்.சி. மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அரவிந்த் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அவருடைய மனைவி மாலினி நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விாசரணை நடத்தி வருகின்றனர்.


Next Story