ஒரு வருடத்தில் 27 ரவுடிகள் உள்பட 113 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வேலூர் மாவட்டத்தில் ஒரு வருடத்தில் 27 ரவுடிகள் உள்பட 113 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
வேலூர் மாவட்டத்தில் ஒரு வருடத்தில் 27 ரவுடிகள் உள்பட 113 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
குண்டர் சட்டம்
வேலூர் மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுவோர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு வருகின்றனர். குற்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் பலர் மணல்கடத்தல், கஞ்சா, குட்கா கடத்தல், திருட்டு, வழிப்பறி, கொள்ளை, சாராயம் விற்பனை உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். குற்றவாளிகள் மீண்டும், மீண்டும் குற்றசெயல்களில் ஈடுபட்டு வருவதால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்பொருட்டு குண்டர் சட்டம் போடப்பட்டு வருகிறது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இந்தமாதம் நேற்று வரை 113 பேர் குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
113 பேர் மீது...
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாராயம் காய்ச்சியதாக 32 பேர் மீதும், கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 21 பேர் மீதும், குட்கா கடத்தலில் ஈடுபட்ட 7 பேர் மீதும், ரவுடிகள் 27 பேர் மீதும், மணல் கடத்திய ஒருவர் மீதும், பாலியல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட 9 பேர் மீதும், திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றங்களில் ஈடுபட்ட 16 பேர் மீதும் என மொத்தம் 113 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
வேலூர் வடக்கு போலீஸ் நிலையம் சார்பில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் நடவடிக்கையின் காரணமாக குற்றசெயல்களை கட்டுப்படுத்தும் வகையில் இதுவரை 24 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.