பண்ருட்டியில் டாஸ்மாக் கடையை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட முயற்சி


பண்ருட்டியில்  டாஸ்மாக் கடையை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட முயற்சி
x
தினத்தந்தி 31 Oct 2022 12:15 AM IST (Updated: 31 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டியில் டாஸ்மாக் கடையை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட முயன்றனா்.

கடலூர்

பண்ருட்டி,

பண்ருட்டி பஸ் நிலையம் எதிரில் ரெயில் நிலையத்துக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாகத்தான், அம்பேத்கர் நகர், திருவள்ளுவர் நகர் பகுதி மக்களும் சென்று வருகின்றனர். மேலும் இந்த சாலையில் தான், டாஸ்மாக் கடையும் உள்ளது. இங்கு மது அருந்துபவர்கள், போதை தலைக்கேறியதும் அங்கு தகராறில் ஈடுபடுகின்றனர். மேலும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள், பெண்களை கிண்டல் செய்து வந்ததாகவும் தெரிகிறது. இந்த கடையை மாற்றக்கோரி பொதுமக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நிர்வாகி கிருஷ்ணராஜ் தலைமையில் கடையை முற்றுகையிட முயன்றனர். இதுபற்றி தகவல் அறிந்த பண்ருட்டி தாசில்தார் வெற்றிவேல், துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற வி.சி.க.வினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story