பரமன்குறிச்சியில் 1000 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
பரமன்குறிச்சியில் 1000 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி
உடன்குடி:
உடன்குடி அருகேயுள்ள பரமன்குறிச்சி முந்திரித்தோட்டம் திருவள்ளுவர் தசரா குழு சார்பில் 1000 பேருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தி.மு.க. மாவட்டப் பிரதிநிதி மதன்ராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில் உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங், ஒன்றியக்குழு உறுப்பினர் ராமலட்சுமி, நல்நூலகர் மாதவன், உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவர் மால்ராஜேஷ், உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பரமன்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 1000 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், சுவர்க் கடிகாரம் ஆகியவை வழங்கப்பட்டது. இதில், வெள்ளாளன்விளை ஊராட்சி மன்றத் தலைவர் ராஜரத்தினம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story