பரமன்குறிச்சியில் அரசு நூலக பயிலரங்கம் திறப்பு விழா


பரமன்குறிச்சியில் அரசு நூலக பயிலரங்கம் திறப்பு விழா
x
தினத்தந்தி 4 May 2023 12:15 AM IST (Updated: 4 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பரமன்குறிச்சியில் அரசு நூலக பயிலரங்கம் திறப்பு விழா நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

பரமன்குறிச்சியில் சத்தியசீலன்- கஸ்தூரி அம்மாள் அரசு பொது நூலக பயிலரங்கம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு தூத்துக்குடி மாவட்ட நூலக அலுவலர் ரெங்கநாயகி தலைமை தாங்கினார். பரமன்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் லங்காபதி, நூலக புரவல கல்வியாளர்கள் சிவராஜ், லெட்சுமி தர்மசீலன், நூலக வாசகர் வட்ட தலைவர் ஆனந்தன், நூலக புரவலர்கள் மணிவண்ணன், முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வைத்தனர்

பரமன்குறிச்சி கிளை நூலகர் ராஜதுரை வரவேற்று பேசினார். தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை துணை இயக்குனர் இளங்கோ சந்திரகுமார் பயிலரங்கத்தை திறந்து வைத்து பேசினார். போட்டி தேர்வு பயிற்றுநர் சக்திகுமார், முன்னாள் வட்டார கல்வி அலுவலர் நம்பித்துரை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி முன்னாள் இயக்குனரும், பயிலரங்க கட்டிட நன்கொடையாளருமான சத்தியசீலன் புத்தக கண்காட்சியை திறந்து வைத்து பேசினார். விழாவில் சென்னை வாழ் பரமன்குறிச்சி நாடார் உறவின்முறை சங்க தலைவர் சிவசுப்பிரமணியம், செயலாளர் ரவி ராஜன், பொருளாளர் ரமேஷ் பூஷணம் ஆகியோர் நூல் அடுக்குகளை வழங்கினா். சிறந்த வாசகர்கள், பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. திருச்செந்தூர் மைய நூலகர் பாலமுருகன் நன்றி கூறினார்.

விழாவில் மாநில இந்து முன்னணி துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், நூலக புரவலர்கள் ஆனந்தன், ரமேஷ், அரசு நூலகர்கள் ராம் மோகன் சிவனனைந்த பெருமாள், ராதாகிருஷ்ணன், ஜீவாஸ், உமா மகேஸ்வரி, கவிதா, கலைச்செல்வி, ஆனந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story