பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் ரூ.8¼ லட்சம் உண்டியல் காணிக்கை
பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் ரூ.8¼ லட்சம் உண்டியல் காணிக்கை செலுத்தப்பட்டு இருந்தது.
கடத்தூர்
கோபி அருகே உள்ள பாரியூரில் பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக 10 உண்டியல்கள் உள்ளன. இந்த நிலையில் கோவிலில் உள்ள 10 உண்டியல்களை திறந்து அதில் உள்ள காணிக்கைகளை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. பவானி சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையாளர் சாமிநாதன், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் செயல் அலுவலர் ரத்தினாம்பாள், இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் சிவமணி ஆகியோர் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. கல்லூரி மாணவிகள், பள்ளிக்கூட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு உண்டியல் காணிக்கைகளை எண்ணினர். இதில் ரூ.8 லட்சத்து 37 ஆயிரத்து 456 ஆயிரத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் 89 கிராம் தங்கமும், 55 கிராம் வெள்ளியும், அமெரிக்க டாலர் நோட்டும் காணிக்கையாக செலுத்தப்பட்டு உள்ளது.