பட்லூர் பகுதியில் கோவில் நிலங்கள் அளவீடு


பட்லூர் பகுதியில் கோவில் நிலங்கள் அளவீடு
x
ஈரோடு

அம்மாபேட்டை அருகே உள்ள பட்லூர் பகுதியில் வாகீஸ்வரர் கோவில், சென்றாய பெருமாள் கோவில், கரிய காளியம்மன் கோவில், விநாயகர் கோவில், மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. இந்த கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் அந்த பகுதியில் ஏராளமாக உள்ளன.

இதற்கிடையே இந்த கோவில்களுக்கு சொந்தமான இடங்களை அளவீடு செய்து இந்து சமய அறநிலையத்துறை மூலம் எல்லை கற்கள் நடும் பணி நடந்தது. தாசில்தார் கவுசல்யா தலைமையில் அந்தியூர் சரக ஆய்வாளர் மாணிக்கம், கோவில் தக்கார் ஸ்ரீதர், நில அளவையர்கள் அருள்பிரகாஷ், ஹரிஷ் ஆகியோர் நிலங்களை அளவீடு செய்து இந்து சமய அறநிலையத்துறையின் எல்லை கற்களை நட்டனர்.


Next Story