பெரியகுளம் நகராட்சியில்பூங்கா அமைக்கும் பணி:அதிகாரிகள் ஆய்வு
பெரியகுளம் நகராட்சியில் பூங்கா அமைக்கும் பணியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தேனி
பெரியகுளம் நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2021-22-ம் ஆண்டு திட்டத்தின் கீழ் பழைய பஸ் நிலையம் அருகே ரூ.56 லட்சம் மதிப்பில் சின்னராஜ் பூங்கா மேம்படுத்துதல், காயிதே மில்லத் நகரில் ரூ.75 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் பூங்கா அமைக்கும் பணி நடக்கிறது. மேலும் கொய்யா தோப்பு பகுதியில் ரூ.77 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் பூங்கா அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நகராட்சிகளின் மண்டல செயற்பொறியாளர் (மதுரை) மனோகரன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் பணிகளை தரமாக, குறிப்பிட காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது நகராட்சி ஆணையர் புனிதன், நகராட்சி பொறியாளர் (பொறுப்பு) சத்தியமூர்த்தி, உதவி பொறியாளர் முருகன், பணி மேற்பார்வையாளர் ஆனந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story