பெரியகுளத்தில்மனைவியை தாக்கிய ராணுவ வீரர் கைது


பெரியகுளத்தில்மனைவியை தாக்கிய ராணுவ வீரர் கைது
x
தினத்தந்தி 6 Feb 2023 12:15 AM IST (Updated: 6 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளத்தில் மனைவியை தாக்கிய ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

பெரியகுளம் வடகரை குருசடி தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 59). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி சரஸ்வதி (50). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ராதாகிருஷ்ணன், மனைவியை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சரஸ்வதி பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதாகிருஷ்ணனை கைது செய்தனர்.


Related Tags :
Next Story