பெரியகுளத்தில்பெண் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார்


பெரியகுளத்தில்பெண் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார்
x
தினத்தந்தி 29 Jan 2023 12:15 AM IST (Updated: 29 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளத்தில் பெண் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

தேனி

பெரியகுளம், வடகரை வி.ஆர்.பி.தெருவை சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக் (வயது 38). இவரது மனைவி ரம்ஜான்பேகம் (36). நேற்று முன்தினம் இரவு வீட்டில் ரம்ஜான் பேகம் இறந்துவிட்டார். இதுகுறித்து அபுபக்கர் சித்திக், தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து நேற்று காலை அவரது வீட்டிற்கு உறவினர்கள் துக்கம் விசாரிக்க சென்றனர். இந்நிலையில் ரம்ஜான்பேகம் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் பெரியகுளம் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் பெரியகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் ரம்ஜான்பேகம் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சந்தேக மரணம் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story