பெரியகுளத்தில்கூட்டுறவு வங்கி பணியாளர் சங்க கூட்டம்


பெரியகுளத்தில்கூட்டுறவு வங்கி பணியாளர் சங்க கூட்டம்
x
தினத்தந்தி 24 April 2023 12:15 AM IST (Updated: 24 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளத்தில், தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

தேனி

பெரியகுளத்தில், தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் குப்புசாமி முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் காமராஜ் பாண்டியன் வரவேற்றார்.

கூட்டத்தில், அத்தியாவசிய பொருட்களை எடை குறைவில்லாமல் வழங்குவதில் உள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு பொட்டலம் போட்டு வழங்க வேண்டும். சங்கங்களில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்கள் அனைவருக்கும் நிபந்தனையின்றி கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில பொருளாளர் ஏ.சேகர், மாநில இணைச் செயலாளர்கள் சேகர், செந்தில்குமார், துணைத் தலைவர் நடராஜன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட தலைவர் அருணகிரி நன்றி கூறினார்.


Related Tags :
Next Story