பெரியகுளத்தில் போலீஸ் ஏட்டுக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது
பெரியகுளத்தில் போலீஸ் ஏட்டுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தேனி
பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 27). நேற்று முன்தினம் இவர், பெரியகுளத்தில் உள்ள போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம் முன்பு நின்று கொண்டு தகாத வார்த்தையால் பேசி சத்தம் போட்டு கொண்டு இருந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த போலீஸ் ஏட்டு துரைமுருகன் அவரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திமடைந்த உதயகுமார், அவரையும் தகாத வார்த்தையால் பேசி தாக்க முயன்றார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதுகுறித்து ஏட்டு துரைமுருகன் பெரியகுளம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயகுமாரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story