பெரியகுளத்தில்மதுபான கடைகளை அகற்றக்கோரி தர்ணா


பெரியகுளத்தில்மதுபான கடைகளை அகற்றக்கோரி தர்ணா
x
தினத்தந்தி 25 Dec 2022 12:15 AM IST (Updated: 25 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளத்தில் மதுபான கடைகளை அகற்றக்கோரி தர்ணா போராட்டம் நடந்தது.

தேனி

பெரியகுளம் நகரில் போக்குவரத்து, பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இடையூறாக உள்ள தனியார் மதுபான கடைகளை அகற்றக்கோரி பெரியகுளம் புதிய பஸ் நிலைய பிரிவு அருகே தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி கலந்து கொண்டு பேசினார். போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம், தேனி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ம.தி.மு.க., தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம், இஸ்லாமிய நல கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் புதிய பஸ் நிலையம் எதிரே புதிதாக திறக்க இருக்கும் தனியார் மதுபான கடையை திறக்க அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Related Tags :
Next Story