பெரியகுளத்தில்வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


பெரியகுளத்தில்வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Sept 2023 12:15 AM IST (Updated: 5 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் வக்கீல் சங்கம் சார்பில், பெரியகுளம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி

பெரியகுளம் வக்கீல் சங்கம் சார்பில், பெரியகுளம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் அம்பாசங்கர் தலைமை தாங்கினார். மூத்த வக்கீல்கள் ஞானகுருசாமி, மருதை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு-புதுச்சேரி வக்கீல்கள் சங்க கூட்டமைப்பின் மாநில துணைத்தலைவர் பாலமுருகன், துணை செயலாளர் நாராயணசாமி, தேனி மாவட்ட வக்கீல்கள் சங்க செயலாளர் பாலாஜி மற்றும் வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது கோர்ட்டுகளில் கொண்டு வரப்பட்டுள்ள இணையதள பதிவு முறையை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இன்று (செவ்வாய்க்கிழமை) கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட போவதாக முடிவு செய்துள்ளனர்.


Related Tags :
Next Story