பிச்சிக்குடியிருப்பில்மாற்றத்தைத் தேடி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
பிச்சிக்குடியிருப்பில் மாற்றத்தைத் தேடி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே பிச்சிக்குடியிருப்பில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாமா பத்மனி தலைமையில் போலீசார் மாற்றத்தை தேடி விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், போக்சோ சட்டங்கள் குறித்தும், குழந்தை திருமண தடைச் சட்டம், குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். பின்னர் பொதுமக்கள் மாற்றத்தை தேடி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
Related Tags :
Next Story