வள்ளாலகரம் ஊராட்சியில் 200 மரக்கன்றுகள் நடப்பட்டன


வள்ளாலகரம் ஊராட்சியில் 200 மரக்கன்றுகள் நடப்பட்டன
x
தினத்தந்தி 6 Jun 2023 12:30 AM IST (Updated: 6 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

வள்ளாலகரம் ஊராட்சியில் 200 மரக்கன்றுகள் நடப்பட்டன.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே வள்ளாலகரம் ஊராட்சி கூட்டுறவு நகரில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. விழாவிற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் மோகன் தலைமை தாங்கினார். கூட்டுறவு நகர் குடியிருப்புவாசிகள் சங்க தலைவர் அருண்விஜய் முன்னிலை வகித்தார். பொருளாளர் சீனிவாசன் வரவேற்று பேசினார். ஊராட்சி மன்ற தலைவி ஜெயசுதா ராபர்ட் மரக்கன்றுகளை நட்டு வைத்து விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஊராட்சி பகுதியில் 200 மரக்கன்றுகள் நடப்பட்டன. முன்னதாக சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் பாவைவேந்தன், ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story