புஞ்சைபுளியம்பட்டியில் 2 ஆயிரம் மீட்டர் தேசிய கொடி ஏந்தி மனித சங்கிலி


புஞ்சைபுளியம்பட்டியில்  2 ஆயிரம் மீட்டர் தேசிய கொடி ஏந்தி மனித சங்கிலி
x

மனித சங்கிலி

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி விடியல் சமூக அறக்கட்டளை, தனியார் பள்ளிகள், அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இணைந்து 75-வது சுதந்திர தின நிறைவு நாளை கொண்டாடினார்கள்.

இதை முன்னிட்டு நேற்று காலை புஞ்சைபுளியம்பட்டி எம்.எல்.ஏ. அலுவலகம் முதல் அண்ணாமலையார் கோவில் வரை 2 ஆயிரம் மீட்டர் தேசிய கொடியை ஏந்தியவாறு மனித சங்கிலி அமைத்து நின்றனர். இதில் ஸ்கேட்டிங் செய்தபடி மாணவர்கள் சுதந்திர தின ஜோதியை ஏந்தியவாறு பஸ் நிலையம் வரை சென்றனர். அங்கு சுதந்திர தின சிறப்புகள் குறித்து பலர் பேசினர்.


Next Story