ஆர்.பாலக்குறிச்சியில் விரட்டுமாடு மஞ்சுவிரட்டு


ஆர்.பாலக்குறிச்சியில் விரட்டுமாடு மஞ்சுவிரட்டு
x

ஆர்.பாலக்குறிச்சியில் விரட்டுமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

புதுக்கோட்டை

பொன்னமராவதி அருகே ஆர்.பாலக்குறிச்சியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பொங்கல் விழாவினை முன்னிட்டு அங்குள்ள பெரியகண்மாயில் விரட்டுமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. முன்னதாக 6 ஊர் சார்பாக அய்யனார் கோவிலுக்கு ஜவுளி எடுத்துவரப்பட்டு கோவில் காளைகள் அவிழ்த்து விட்டனர். அதன் பின்னர் சுற்று வட்டார பகுதியில் இருந்து அழைத்து வரப்பட்ட சுமார் 700-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். சில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் துள்ளிக் குதித்து ஓடியது. பின்னர் வெற்றியாளருக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளானோர் கலந்து கொண்டு கண்டு ரசித்தனர்.


Next Story