கீழ்வேளூரில் சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பங்கள் சீரமைப்பு


தினத்தந்தி 21 Feb 2023 6:45 PM GMT (Updated: 21 Feb 2023 6:46 PM GMT)

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக கீழ்வேளூரில் சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டது.

நாகப்பட்டினம்

சிக்கல்:

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக கீழ்வேளூரில் சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டது.

சாய்ந்த மின்கம்பங்கள்

கீழ்வேளூரில் கச்சனம் மெயின் சாலையில் 14-வது வார்டு அமைந்துள்ளது. இந்த சாலையையொட்டி மேற்கு பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி, உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உள்ளது.

இந்த சாலையில் 2 மின்கம்பங்கள் சேதமடைந்து சாய்ந்த நிலையில் காணப்பட்டது. இதனால் இந்த வழியாக தினமும் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள், கோர்ட்டுக்கு செல்பவர்கள் அச்சமடைந்தனர்.

சீரமைப்பு

விபத்து ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு சாய்ந்த நிலையில் காணப்படும் மின்கம்பங்களை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் கடந்த 18-ந் தேதி வெளியானது.இதன் எதிரொலியாக மின் வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சாய்ந்த நிலையில் இருந்த 2 மின் கம்பங்களை சீரமைத்தனர்.இதை தொடர்ந்து உடன் நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.


Next Story