சாலையோர குப்பைகளில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


சாலையோர குப்பைகளில்  தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
x

நெல்லை வண்ணார்பேட்டையில் சாலையோர குப்பைகளில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையோர வயல்வெளி பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகளில் நேற்று காலையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அதன் அருகில் நர்சரி கார்டன் மற்றும் வணிக நிறுவனங்கள் இருந்ததால், அப்பகுதியினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் தீ கொழுந்து விட்டு எரிந்ததால், இதுகுறித்து பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையில், வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

இதற்கிடையே நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலம் அருகில் சென்ற கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, காரில் எரிந்த தீயை அணைத்தனர். தீ விபத்து நிகழ்ந்ததும், காரில் இருந்தவர்கள் உடனே கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீ விபத்து சம்பவங்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தின.


Next Story