சாத்தான்குளத்தில் தராசுபடிகளுக்கு முத்திரை பதிக்கும் சிறப்பு முகாம்
சாத்தான்குளத்தில் தராசுபடிகளுக்கு முத்திரை பதிக்கும் சிறப்பு முகாம் இரண்டு நாட்கள் நடக்கிறது.
தூத்துக்குடி
தட்டார்மடம்:
திருச்செந்தூர் தொழிலாளர் நலத்துறை முத்திரை ஆய்வாளர் ராம் மோகன், சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நெல்லை தொழிலாளர் துறை இணை ஆணையர் சுமதி ஆகியோர் உத்தரவுப்படி, தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) திருவள்ளுவன் ஆலோசனையின் பேரில் சாத்தான்குளம் பகுதியில் முத்திரையிடப்படாத தராசு இருந்தால் 2.10.2022 முதல் 5.10.2022 வரை நடைபெறும் முத்திரை பதிக்கும் சிறப்பு முகாமிற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படுகிறது. சாத்தான்குளம் வியாபாரிகள் சங்கத்தில் நடைபெறும் இந்த சிறப்பு முகாமில் தராசு முத்திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை வியாபாரிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story