சாத்தான்குளத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்
சாத்தான்குளத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்றார்.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் காமராஜர் நகரில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளுக்கு வேட்டி, சட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் ஆ. பாலமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி செயலர் ராமஜெயம், மாநில மாணவரணி துணை செயலர் உமரிசங்கர், ஒன்றிய அவைத் தலைவர் ராஜபாண்டி, மாவட்ட ஆவின் தலைவர் சுரேஷ்குமார். மாநில பொதுக்குழு உறுப்பினர் இந்திரகாசி, நடுவக்குறிச்சி முன்னாள் ஊராட்சித் தலைவர் ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய துணை செயலாளர் அன்பழகன் வரவேற்றார். இதில் தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, 500 இளைஞரணி நிர்வாகிகளுக்கு லோகோவுடன் கூடிய வேட்டி, சட்டைகளை வழங்கி பேசினார்.
இதில் மாவட்ட பிரதிநிதிகள், ஒன்றிய இளைஞர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.