சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் நினைவேந்தல் நிகழ்ச்சி


சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

சாத்தான்குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் 2-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று அனுசரிக்கப்பட்டது. காமராஜர் சிலை அருகில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் காவல்துறை சித்திரவதைக்கு எதிரான கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும், மூத்த வழக்கறிஞருமான ஹென்றி திபேன் மற்றும் நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு மெழுகுவா்த்தி ஏந்தி, மலர் அஞ்சலி செலுத்தினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குடும்பத்தினரும், நண்பர்களும் செய்திருந்தனர்.


Next Story