சத்தியமங்கலம் மார்க்கெட்டில்மல்லிகைப்பூ கிலோ ரூ.420-க்கு ஏலம்


சத்தியமங்கலம் மார்க்கெட்டில்மல்லிகைப்பூ கிலோ ரூ.420-க்கு ஏலம்
x
ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு நாள்தோறும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் 4 டன் பூக்களை கொண்டு வந்திருந்தனர். இதில் மல்லிகைப்பூ கிலோ ரூ.420-க்கும், முல்லை ரூ.180-க்கும், காக்கடா ரூ.125-க்கும், செண்டுமல்லி ரூ.50-க்கும், பட்டுப்பூ ரூ.51-க்கும், சாதிமல்லி ரூ.400-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும், அரளி ரூ.60-க்கும், ,துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.60-க்கும், சம்பங்கி ரூ.60-க்கு ஏலம் போனது.


Related Tags :
Next Story