சத்தியமங்கலத்தில் வாழைத்தார் விலை குறைந்தது


சத்தியமங்கலத்தில்  வாழைத்தார் விலை குறைந்தது
x

சத்தியமங்கலத்தில் வாழைத்தார் விலை குறைந்தது.

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வெள்ளிக்கிழமை தோறும் வாழைத்தார் ஏலம் நடைபெறும். கடந்த வாரம் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை வந்ததால் வாழைத்தார்கள் விலை உயர்ந்தது. குறிப்பாக பூவன், தேன் வாழைத்தார்கள் ரூ.700 வரை விற்றது. இந்தநிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் 700 ரூபாய்க்கு விற்ற பூவன் தார் ரூ.350-க்கும், 675 ரூபாய்க்கு விற்ற தேன்வாழை ரூ.400-க்கும் விலை குறைந்து ஏலம் போனது.


Next Story