சங்கராபுரத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி


சங்கராபுரத்தில்  ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

சங்கராபுரத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சங்கராபுரம் மயிலாம்பாறை நான்கு ரோடு சந்திப்பில் நடைபெற்றது. இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி கலந்து கொண்டு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், அதை அணியாமல் செல்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். மேலும் செல்போன் பேசிக்கொண்டும், குடித்து விட்டும் வாகனங்களை ஓட்டக்கூடாது என்பது உள்ளிட்ட சாலை விதிகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். இதில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story