சங்கராபுரத்தில் அரசு பஸ்சுக்கு அடியில் புகுந்தவரால் பரபரப்பு


சங்கராபுரத்தில்  அரசு பஸ்சுக்கு அடியில் புகுந்தவரால் பரபரப்பு
x

சங்கராபுரத்தில் அரசு பஸ்சுக்கு அடியில் புகுந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

புதுப்பாலப்பட்டில் இருந்து சங்கராபுரம் வழியாக கள்ளக்குறிச்சி நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. சங்கராபுரம் மும்முனை சந்திப்பு அருகே வேகத்தடையில் ஏறி இறங்கியபோது சாலையில் நின்று கொண்டிருந்த ஒருவர் திடீரென பஸ்சின் முன்பு உருண்டு சென்று டயருக்கு அருகில் படுத்துக்கொண்டார். இதைபார்த்த டிரைவர் பஸ்சை பிரேக் போட்டு உடனடியாக நிறுத்தினார். உடன் அங்கிருந்தவர்களும் பஸ்சில் இருந்த பயணிகளும் அங்கு வந்து பஸ்சுக்கு அடியில் படுத்திருந்தவரை வெளியே வருமாறு அழைத்தனர். ஆனால் அவர் வரமறுத்துவிட்டார். இதுபற்றிஅறிந்த சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து வந்து அவரை பஸ்சின் அடியில் இருந்து மீட்டு விசாரித்தனர். விசாரணையில் அவர் பாலப்பட்டு பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், தனது மனைவியுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக வந்தபோது திடீரென பஸ்சின் அடியில் புகுந்து படுத்துக்கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை அவரது மனைவியுடன் ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பரபரப்பும் ஏற்பட்டது.


Next Story