சிவகிரி பகுதியில் கழுதை பால் விற்பனை அமோகம் ; 50 மில்லி ரூ.200-க்கு விற்பனை
சிவகிரி பகுதியில் கழுதை பால் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. 50 மில்லி கழுதை பால் ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சிவகிரி
சிவகிரி பகுதியில் கழுதை பால் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. 50 மில்லி கழுதை பால் ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கழுதை பால்
சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கழுதை பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக வெளியூர்களில் இருந்து சிலர் சிவகிரி பகுதிக்கு வந்து தங்கி இருந்து கிராமம் கிராமமாக சென்று கழுதை பால் விற்பனை செய்து வருகிறார்கள்.
சிவகிரியில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் 2 கழுதைகளை ஓட்டி வந்து பாலை கறந்து விற்று வருகிறார்.
பெரியவர்களுக்கு 50 மில்லி பால் ரூ.200 வரையும், குழந்தைகளுக்கு சங்குகளில் ரூ.50 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி குடிக்கிறார்கள்.
நோய் எதிர்ப்பு சக்தி
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், 'கழுதை பால் மருத்துவ குணம் கொண்டது. மேலும் இந்த பாலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். எனவே கழுதை பாலை விருப்பப்பட்டு வாங்கி குடிக்கிறோம்,' என்றனர். இதனால் சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கழுதை பால் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.