சிவகாசி அரசு ஆஸ்பத்திரி கழிவறையில் குறைமாத ஆண் சிசு உடல் மீட்பு
சிவகாசி அரசு ஆஸ்பத்திரி கழிவறையில், குறைமாத ஆண் சிசு உடல் மீட்கப்பட்டது.
சிவகாசி,
சிவகாசி அரசு ஆஸ்பத்திரி கழிவறையில், குறைமாத ஆண் சிசு உடல் மீட்கப்பட்டது.
அரசு ஆஸ்பத்திரி
தொழில் நகரமான சிவகாசியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் சுமார் 600-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற வருகின்றனர். இந்த ஆஸ்பத்திரியில் மகப்பேறு சிகிச்சை பிரிவு தனியாக இயங்கி வருகிறது. நேற்று மதியம் மகப்பேறு சிகிச்சை பிரிவில் உள்ள ஒரு கழிவறையை சுத்தம் செய்ய தூய்மை பணியாளர் சென்றார்.
சிசு உடல் மீட்பு
அப்போது, 250 கிராம் எடையுள்ள குறைமாத ஆண் சிசு உடல் கிடந்தது. இதைக்கண்ட தூய்மை பணியாளர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சம்பந்தப்பட்ட பிரிவின் தலைமை டாக்டர் அய்யனாரிடம் தகவல் தெரிவித்தார். சிவகாசி டவுன் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த உடல் மீட்கப்பட்டது. சிசுவின் உடல் கழிவறையில் கிடந்ததற்கான காரணம் பற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.