தென்திருப்பேரையில்கைலாசநாதர் கோவிலுக்கு சொந்தமான 1.25 ஏக்கர் நிலம் மீட்பு


தென்திருப்பேரையில்கைலாசநாதர் கோவிலுக்கு சொந்தமான 1.25 ஏக்கர் நிலம் மீட்பு
x
தினத்தந்தி 8 Feb 2023 12:15 AM IST (Updated: 8 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தென்திருப்பேரையில் கைலாசநாதர் கோவிலுக்கு சொந்தமான 1.25 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.

தூத்துக்குடி

தென்திருப்பேரை:

தென்திருப்பேரையில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த கைலாசநாதர் கோவிலுக்கு சொந்தமான 1.25 ஏக்கர் நிலத்தை அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக மீட்டனர்.

கோவில் நிலம் ஆக்கிரமிப்பு

தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையில் நவகைலாயத்தில் 7-வது தலமாமாக விளங்கும் கைலாசநாதர் கோவிலுக்கு சொந்தமான சுமார் 1.25 ஏக்கர் நஞ்சை நிலம் குருகாட்டூர் கிராமத்தில் தனியார் ஆக்கிரமைப்பில் இருந்து வந்தது. இந்தநிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்களும், பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த அந்த நிலத்தில் தற்போது நெல் விவசாயம் செய்யப்பட்டுள்ளது.

அதிகாரிகள் மீட்டனர்

அந்த நிலத்தை நேற்று இந்து அறநிலைத்துறை உதவி ஆணையர் சங்கர் முன்னிலையில் வருவாய்த்துறையினர் மீட்டனர். இந்த பணியில் இந்து அறநிலையத்துறை தனி தாசில்தார் ஈஸ்வரநாதன், செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி உட்பட அரசு அதிகாரிகள் ஈடுபட்டனர்.

அந்த நிலத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் என்று அறிவிப்பு பலகையும் நடப்பட்டது. அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


Next Story