ஸ்ரீவைகுண்டத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்
ஸ்ரீவைகுண்டத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடந்தது. 1-வது வார்டு கோசல்ராம் நகர், கனியான் காலனி, கருணாநிதி நகர், பிச்சனார் தோப்பு, 6-வார்டு மருத்துவர் காலனி, கீழக்கோட்டை வாசல் தெருக்களின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த போராட்டத்துக்கு, நகர செயலாளர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் மாரியப்பன், ஒன்றிய செயலாளர் நம்பிராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கருப்பசாமி, ராமச்சந்திரன், தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், காந்தி, முருகன், சின்னத்தம்பி உள்பட பலா் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story