ஸ்ரீவைகுண்டம் பகுதியில்கோவில்களில் தொல்லியல் அதிகாரி ஆய்வு
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கோவில்களில் தொல்லியல் அதிகாரி ஆய்வு நடத்தினார்.
தூத்துக்குடி
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இந்து சமய அறநிலையத்துக்கு உட்பட்ட பழமைவாய்ந்த கோவில்களை மேம்படுத்தும் வகையில் தொல்லியல் துறை ஆலோசகர் மணி நேற்று ஆய்வு மேற்கொண்டார். முத்தாலங்குறிச்சி வீரபாண்டீஸ்வரர் கோவில், சிங்காத்தாகுறிச்சி அரியநாச்சியம்மன் கோவில், வல்லநாடு செல்வவிநாயகர் கோவில், ஆழிவிளங்கும் பெருமாள் கோவில், வசவப்பபுரம் ராமசாமி கோவில், விட்டிலாபுரம் விட்டீலேஸ்வரர் கோவில், செய்துங்கநல்லூர் வியாக்கிரபாதீஸ்வரர், ஸ்ரீவைகுண்டம் சூடிகொடுத்த நாச்சியார் கோவில் உள்ளிட்ட கோவில்களில் ஆய்வு செய்தார்.
கோவில்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து பக்தர்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர். கோவில் ஆய்வாளர் நம்பி, முத்தாலங்குறிச்சி காமராசு மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story