ஸ்ரீவைகுண்டம் பகுதியில்சிறு தொழில் நுட்ப பூங்கா அமைக்க எம்.எல்.ஏ. கோரிக்கை


ஸ்ரீவைகுண்டம் பகுதியில்சிறு தொழில் நுட்ப பூங்கா அமைக்க எம்.எல்.ஏ. கோரிக்கை
x
தினத்தந்தி 8 Sept 2023 12:15 AM IST (Updated: 8 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சிறு தொழில் நுட்ப பூங்கா அமைக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி

ஏரல்:

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி கிராமப்புறங்கள் அதிகம் நிறைந்த பகுதியாகும். இங்கு முதல் பட்டதாரி இளைஞர்கள் மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் அதிகம் பேர் இருக்கின்றனர். இந்த இளைஞர்கள் குடும்பங்களை பிரிந்து சென்னை, பெங்களூர், கோவை போன்ற தொலைதூர நகரங்களுக்கு வேலைக்காக செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் பெண்களை வெளியூர்களுக்கு வேலைக்கு அனுப்ப கிராமத்திலுள்ள பெற்றோர்கள் தயங்குகிறார்கள். இதனால் பெரும்பாலான பட்டதாரி பெண்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். எனவே ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், ஆழ்வார்திருநகரி மற்றும் கருங்குளம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மினி ஐடி பார்க் (சிறிய தொழில் நுட்ப பூங்கா) அமைத்துதர வேண்டும், என தெரிவித்துள்ளார்.


Next Story