ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில்சித்திரை திருவிழா பந்தல்கால் நடும் நிகழ்ச்சி


தினத்தந்தி 29 March 2023 12:15 AM IST (Updated: 29 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சித்திரை திருவிழா பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி பெருமாள் கோவிலில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. வருகிற ஏப்.11-ந் தேதி திருவிழா கொடியேற்றம் நடக்கிறது.

சித்திரை திருவிழா

நவதிருப்பதி பெருமாள் கோவில்களில் முதல்கோவிலான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி பெருமாள் கோவிலில், பிரசித்திபெற்ற சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெற உள்ளது.

இ்த்திருவிழாவினை முன்னிட்டு கள்ளபிரான் சுவாமி பெருமாள் கோவிலில் பந்தல் கால் நாட்டுதல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. காலை 7மணிக்கு விஸ்வரூபமும், காலை 7.30ம ணிக்கு திருமஞ்சனமும், 8.30மணிக்கு திருவாராதனமும் நடைபெற்றது. காலை 9.35 மணிக்கு திருவிழாவின் தொடக்கமாக பால்குறடில் பந்தல் கால் பூஜை செய்யப்பட்டு, கோவில் முன்பு பந்தல்கால் நாட்டப்பட்டது. தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

இதில், நிர்வாக அதிகாரி கோவலமணிகண்டன், தக்கார் அஜித், ஆய்வாளர் நம்பி மற்றும் பக்தர்கள் உட்பட பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

கொடியேற்றம்

தொடர்ந்து ஏப்.10-ந் தேதி காலை 6 மணி முதல் 7 மணி வரை தேங்காய் வாங்குதல் தாக்குதல் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு திருமுளைச்சாத்து மிருத்ஸங்கிரகணம் நிகழ்ச்சியும், இரவு தோளுக்கினியானில் சேனை முதல்வர் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஏப்.11-ந் தேதி கொடியேற்றத்துடன் சித்திரைதிருவிழா தொடங்குகிறது. அன்று முதல் தினமும் காலை தோளுக்கினியானில் வீதி புறப்பாடு நிகழ்ச்சியும், தங்க மசகிரியில் திருமஞ்சனம், தீர்த்தவாரி விநியோக கோஷ்டியும், சிம்ம வாகனம் அனுமார் வாகனம் ஷேச வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி திருவீதி உலா புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறும். ஏப்.12-ந் தேதி காலை 9.30மணிக்கு கள்ளபிரான், காசினி வேந்தபெருமாள், விஜயாசனபெருமாள், நம்மாழ்வார் மங்களாசாசனம் நடைபெறுகிறது.

தேரோட்டம்

ஸ்ரீவைகுண்டம் மேடைப் பிள்ளையார் கோவில் முன்பு 9 மணிக்கு கள்ளபிரான், காசினி வேந்தபெருமாள், விஜயாசனபெருமாள் சுவாமிகள் 4 கருட வாகனத்தில்

குடவரை பெருவாயில் ஹம்ஸ வாகனத்தில் நம்மாழ்வாருக்கு எதிர் சேவையில் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள், புறப்பாடு, திருவீதி உலாவுடன் விழா நடைபெறுகிறது. சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஏப்.19-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 5.30மணிக்கு பெருமாள் கொடிமரம் சுற்றி எழுந்தருளலும், 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளலும், காலை 9.10மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தலுடன் தேரோட்டமும் நடக்கிறது. தொடர்ந்து அன்று இரவு 9 மணிக்கு பல்லக்கில் தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலத்தில் திருவீதி புறப்பாடு நடைபெறுகிறது. ஏப்.20-ந் தேதி காலை 9 மணிக்கு சோரநாதர் எழுந்தருளி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணிக்கு வெட்டிவேர் சத்திரத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது. ஏப்.21-ந் தேதி மாலை 6 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத கள்ளபிரான் சுவாமிக்கு புஷ்பாஞ்சலி சயன குறட்டில் நடைபெறுகிறது


Next Story