ஸ்ரீவைகுண்டம் ஆற்று தண்ணீரில்மிதந்தபடி யோகாசனம் செய்த 76 வயது முதியவர்


ஸ்ரீவைகுண்டம் ஆற்று தண்ணீரில்மிதந்தபடி யோகாசனம் செய்த 76 வயது முதியவர்
x
தினத்தந்தி 3 April 2023 12:15 AM IST (Updated: 3 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் ஆற்று தண்ணீரில் மிதந்தபடி 76 வயது முதியவர் யோகாசனம் செய்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஆழ்வார்திருநகரியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். ஓய்வுபெற்ற பள்ளி தலைமை ஆசிரியர். 76 வயது முதியவர். இவர் சிலம்பம் மட்டுமின்றி கராத்தே, வில்வித்தை யோகாசனம் உள்ளிட்ட பயிற்சிகளை பெற்றுள்ளார். பணிஓய்வுக்குப்பின் இவர் வாலிபர்களுக்கு இலவசமாக பயிற்சி கொடுத்து வருகிறார். கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நேற்று இவர் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரில் மிதந்த படி சூரிய நமஸ்காரம், பூமாசனம், வஜ்ராசனம் உள்ளிட்ட ஆசனங்களை செய்தார்.


Next Story