ஸ்ரீவைகுண்டத்தில்விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம்
ஸ்ரீவைகுண்டத்தில் விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம்
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் வேளாண்மைத்துறை அலுவலகத்தில் அட்மா திட்ட வட்டார விவசாயிகளுக்கான ஆலோசனை குழு கூட்டம் நடந்தது. இதில் ஆலோசனை குழுவில் உள்ள விவசாய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அட்மா தலைவர் பெருமாள் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்திற்கு வேளாண்மை துணை இயக்குனர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து, விவசாய உறுப்பினர்களுக்கு வேளாண்துறையில் உள்ள திட்டங்கள் பற்றியும் எதிர்வரும் காலங்களில் விவசாய தொழிலை எவ்வாறு லாபம் தரும் வகையில் செய்வது? என்பது குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினார். கூட்டத்தில், வேளாண்மை உதவி இயக்குனர் வனஜாதேவி கலந்து கொண்டு வேளாண்துறையிலுள்ள நலத்திட்டங்கள் பற்றி விளக்கி பேசினார். அட்மா திட்டத்தில் உள்ள உழவர் பயிற்சிகள் மற்றும் விவசாயிகளுக்கான சுற்றுலாக்கள் குறித்து வட்டார தொழில்நுட்ப மேலாளர் இசக்கிராணி விளக்கினார்.
இக்கூட்டத்தில் வேளாண்மை அலுவலர் இமயா, துணை வேளாண்மை அலுவலர் சிவகுமார், தோட்டக்கலை உதவி அலுவலர் பேபி சண்முகபிரியா, உதவி வேளாண்மை அலுவலர் (வேளாண் வணிகம்) அருணாச்சலம் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்ப மேலாளர் ஆனந்தி செய்திருந்தார்.